இயக்குனர் கிருஷ்ணவேல் டி.எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹும் வழி தெரியாத வலி’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 13) சென்னையில் நடைபெறுகிறது.
HUM Happiest Pain Movie
ஃபர்ஸ்ட் லைன் உமாபதி தயாரிப்பில் இயக்குனர் கிருஷ்ணவேல் எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘ஹும் வழி தெரியாத வலி’. இந்தப் படத்தை சித்தர் திரு தணிகாசலம், பண்ருட்டி ரமேஷ் குமார், கௌரி ஸ்ரீதர் ஆகியோருடன் இணைந்து உமாபதி தயாரித்துள்ளார்.
படத்தில் பணியாற்றிய கலைஞர்கள்
படத்தின் பாடல் வரிகளை விவேகா எழுத, ஒளிப்பதிவுப் பணிகளை ஆறுமுகம், அருள், வினோத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் படத்திற்கு கிருஷ்ணா இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை எஸ் ஜி சேகர் கவனித்துள்ளார்.
டிரெய்லர் இன்று வெளியீடு
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை பார்க்கும் பொழுது இது ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று(ஜூன் 13 மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் தங்கர் பச்சான், கே. பாக்யராஜ், பாடல் ஆசிரியர் விவேகா, திரைப்பட தயாரிப்பாளர் அப்துல் பாசித் சையத், வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
