ரோட்டர்டேம் பட விழாவில் விடுதலை படம் திரையிடப்பட்டபோது அதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததோடு 5 நிமிட கைதட்டலும் கிடைத்திருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விடுதலை படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்படத்தின் பணிகள் முடியும் முன்னரே நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டேம் பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து அதனை ஒரே படமாக திரையிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்.... ஏழு கடல் ஏழு மலை தாண்டிச் சென்று அஞ்சலி எடுத்த அசத்தல் போட்டோஸ்... வைரலாகும் ரோட்டர்டேம் பட விழா கிளிக்ஸ்

இந்த நிலையில், இன்று திரையிடப்பட்ட விடுதலை படத்துக்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தை பார்த்து முடித்ததும் 5 நிமிடங்கள் எழுந்து நின்று வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனால் படக்குழுவும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சியையும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 

Scroll to load tweet…

விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு முன்பே ஏகோபித்த வரவேற்பை பெற்று உள்ளதால், முதல் பாகத்தை விட அதிக வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரோட்டர்டேம் பட விழாவில் விருது வென்ற ஒரே தமிழ் படம் கூழாங்கல் தான். அந்த சாதனையை விடுதலை படமும் படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்.... நடு ராத்தியில் உதவிய மறக்க முடியாத நபர்..! கண் கலங்க வைத்த பாசம்.. வெற்றிமாறன் கூறிய நெகிழ்ச்சி சம்பவம்!