இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று அதிகரிப்பது பாலிவுட்டை கலத்தில் ஆழ்த்தியுள்ளது. 


கடந்த மாதம் லண்டன் சென்று திரும்பிய பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தொடர்ந்து 5 முறை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதேபோல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரீம் மோரானி, அவரது இரண்டு மகள்கள் ஷாஸா, சோவா மோரானி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது ஷாஸாவும், சோவாவும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தயாரிப்பாளர் கரீம் மோரானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் முன்னாள் மனைவி சுசானே கானின் தங்கையும், பிரபல நகை வடிவமைப்பாளருமான ஃபரா கான் அலியிடம் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ஃபரா கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

அதில், கொரோனா பற்றிய செய்திகள் வைரஸை விட வேகமாக பரவுகிறது. எனது வீட்டில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். 

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது என்பதால் ஃபரா கான் அலி வீட்டில் பணியாற்றிய ஊழியர் மூலமாக அவருக்கும் பரவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிருத்திக் ரோஷன், அவரது முன்னாள் மனைவி சுசானே கான் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.