How to become chief minister on thirty days Telling you

முப்பதே நாளில் முதலமைச்சர் ஆவது எப்படி? என்ற கேள்விக்கு பதிலை “அண்ணனுக்கு ஜே” என்ற படத்தின் மூலம் சொல்ல வருகிறார் அட்டக்கத்தி தினேஷ்..

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணனுக்கு ஜே’.

பொதுவாக பல பஞ்ச் டைலாக்குகள், அனல் தெறிக்கும் சண்டை காட்சிகள் என எடுக்கப்படும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, அரசியல் கேலி பேசும் வசனங்களுடன் வெளிவரும் படங்களுக்கு மக்களின் ஆதரவு எப்போதும் கிடைத்து விடுகிறது. அதுவும் தெரிந்த கதாநாயகன் அதில் நடித்துவிட்டால் போதும், வரவேற்பு விண்ணை பிளக்கும்.

இதற்கு சிறந்த உதாரணம் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான “அமைதிப் படை”. இப்போதுள்ள அரசியலை கூட அப்போதே எடுத்துவிட்ட பெருமை இந்த படத்தை சேரும்ன். மக்களிடம் மிகவும் நல்ல வரவேற்பை இப்போது வரை பெற்று வருகிறது.

இந்த வகையில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ படம், தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழலை நக்கலும், நையாண்டியுமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் போஸ்டரில் தினேஷ், “30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி?” என்ற புத்தகத்தை வெள்ளைச் சட்டைப் போட்டு நாற்காலியில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டு படிக்கிறார்.

இந்தப் படம் மூலம் விரைவில் அனைவருக்கும் 30 நாளில் முதல்வராவது எப்படி என்ற எளிய வழி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.