தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பிக் பாஸுக்கு எல்லாம் அப்பா தான் இந்தி பிக் பாஸ். பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் 29- ம் தேதி தொடங்குகிறது.

 

இந்த சீசனில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுமே பிரபலங்கள் என்று கூறப்படுகிறது. 13வது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரஷமி தேசாய்க்கு தான் அதிகம் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. ரஷமிக்கு ரூ. 1.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல். ரஷமி என்ன பெரிய ஒஸ்தி என்று அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஷமி தனியாக கலந்து கொள்ளவில்லை. அவரின் காதலரான அர்ஹான் கானுடன் சேர்ந்து கலந்து கொள்ள இருக்கிறார். 

தனித் தனியாக வந்து பிக் பாஸ் வீட்டில் சந்தித்து காதல் கொண்டாலே பயங்கரமாக இருக்கும். இதில் காதலர்கள் ஜோடியாக பங்கேற்றால் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சமிருக்காது. அவர்களால் ஏற்படப் போகும் பரபரப்பு உள்ளிட்ட அனைத்தையும் மனதில் வைத்து கணக்குப் போட்டு பார்த்து தான் இந்த சம்பளமாம்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் வைத்து ரஷமியும், அர்ஹானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் திட்டம் இல்லை என்று ரஷமி தெரிவித்துள்ளார்.