Indian 2 :  இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது, அதன்பின் இன்று வரை தொடங்கப்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசான படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் இரு வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் கமல். குறிப்பாக அவர் இந்தியன் தாத்தாவாக வந்த சேனாபதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

இதையும் படியுங்கள்... Ponniyin Selvan: இளவரசி உங்களின் லைவ் லோகேஷன் அனுப்புங்கோ ப்ளீஸ் ...த்ரிஷாவை கிண்டல் அடித்து கார்த்தி ட்விட்..

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு படப்பிடிப்புடன் தொடங்கியது. கிட்டத்தட்ட 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட ஷூட்டிங் இன்று வரை தொடங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்... மீண்டும் காதலில் விழுந்த விஷால்... விரைவில் கல்யாணம்! - பொண்ணு யார் தெரியுமா?

இடையே இயக்குனர் ஷங்கருக்கு, தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றத்தை நாடியதால் இப்படம் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதால், இந்தியன் 2 படத்தை எடுக்க மீண்டும் முனைப்பு காட்டி வருகிறது லைகா நிறுவனம்.

இதையும் படியுங்கள்... நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!

சமீபத்தில் உதயநிதி இப்படக்குழுவுடன் பேசி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண உதவினார். இதனால் தற்போது இந்தியன் 2 படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. சமீபத்திய தகவல்படி இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.