ஷாப்பிங் மாலில் அடியாட்களை அடித்து துவம்சம் பண்ணிவிட்டு ஹீரோ பஞ்ச் டயலாக் பேசும் போது, ஓரத்தில் நின்று கைதட்டும் அந்த ஒன்றரையணா ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு இருக்கும் லட்சணம் கூட அவருக்கு கிடையாது. ஆனால் லக்கு லபோதிபோன்னு அவர் காட்டில் பொளந்து கொட்டியதில் பாலிவுட் வரையில் பாதம் பதித்திருக்கிறார் மனுஷன்.  கிடைத்த வாய்ப்பை கில்லியாக யூஸ் பண்ணியதில் இவர் படங்கள் பிய்ச்சுக்கிட்டு ஓடின. 

இதனால் சான்ஸே இல்லை ஹீரோயின்கள் கூட இவரது பட வாய்ப்புக்காக தம்பியை ‘தடவி’ தாஜா செய்ய தயங்கா நிலை உருவானது. சில ஹீரோக்களுக்கு உடம்பில் மச்சமிருக்கலாம், ஆனால் தம்பிக்கு உச்ச மச்சத்தில் உடம்பு. அதனால் கிளிகள் லைன் கட்டி நின்று லவ்ஸ் விட்டன. 
இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரும் அந்த குள்ள கோலிக்கா ஹீரோயினும் ஒரு படத்தில் ஜோடி கட்டினார்கள்.

 படம் அப்படியொன்றும் பசையை கொட்டவில்லை ஆனால் ஹீரோ, ஹீரோயினுக்கு இடையில் பச்சக் என ஒட்டிக் கொண்டது கெமிஸ்ட்ரி. ஷூட்டிங் காலத்திலேயே இருவரும் பல முறை பர்ஷனலாக மீட் பண்ணி ’பலா’ப்பல விஷயங்களை சின்ஸியராக டிஸ்கஸ் செய்ததாக இன்டஸ்ட்ரியில் இன்ட்ரஸ்ட்டிங்  கதைகள் உண்டு. பிறகு இருவரும் ஆளாளுக்கு அவங்கவங்க கதையை பார்க்கப்போய்விட்டனர். 

வாட்ஸப்பில் அவ்வப்போது ‘மிஸ் யூ டா!’ என்று பரஸ்பரம் லவ்விக் கொள்வதோடு சரி. இருவரும் வாழ்க்கைபட்டது பெரிய பெரியா இடத்தில் என்பதால் இருவர் மீதும் அவர்கள் வீடுகளில் கண் வைத்திருந்தார்கள். 

இந்த சூழலில் சமீபத்தில் தனது சீக்வெல் பட ஷூட்டிங்குக்காக அக்கட தேசம் சென்றிருந்தார் ஹீரோ. 

அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தனது சமீபத்திய பட வெற்றிக்காக சக்ஸஸ் பார்ட்டி கொடுத்தார், அதே அக்கட பூமியில் பிறந்து கோலிவுட்டில் வந்து சங்கங்களின் தலைவர் பதவி வரை கொடி நாட்டிய அந்த கறுஞ்சிறுத்தை. 

பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த ஹீரோயினும், ஷுட்டிங்குக்காக வந்திருந்த ஹீரோவும் அந்த ஸ்டார் ஹோட்டல் வராந்தாவில் மீட் பண்ணிக் கொண்டிருந்தனர்.

கட்டிப்பிடித்து, கன்னங்களை முட்டிக் கொண்ட பிறகு பேசிக் கொண்டனர். ஹீரோயின் வான்டட் ஆக இந்த ஹீரோவை அந்த பார்ட்டிக்கு அழைத்தார். ஆனால் ‘அவரு கூப்பிடாம நான் வர்றது நாட் குட்’ என்றார் ஹீரோ. ஆனால் ‘நீ வர்லேன்னா நானும் போகல. வா உன் ரூமுக்கு போயி சாட் பண்லாம்’ என்றார் ஹீரோயின். 

இதற்குள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த ஹீரோ அந்த இடத்திற்கு யதேச்சையாக வர, இருவரையும் ஒன்றாக பார்த்து அவருக்கு காதில் புகை. இருந்தாலும் சிரித்துக் கொண்டே இன்வைட் செய்தார் பார்ட்டிக்கு. பிறகு சகஜமாக பார்ட்டியில் கலந்து கொண்ட மச்ச ஹீரோ சில ரவுண்டுகள் ஜாலியாக கலகலத்துவிட்டு எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். ’அப்பாடா தொலைஞ்சான் டா!’ என்று பார்ட்டி ஹீரோ குதூகலமாக ஹீரோயின் இருந்த இடத்துக்கு திரும்பினால், அவரும் மிஸ்ஸிங். 

மச்ச ஹீரோ கூடவே கிளம்பிய ஹீரோயின் அவர் ரூமிலேயே அன்று செட்டிலாகிவிட்டார். 

பல மாதங்கள் கழித்து சந்திச்ச ஏக்கம் ரெண்டு பேருக்குள்ளும் பற்றி எரிந்தது. ’நீ அப்போ மாதிரி இல்ல, இந்த இடத்துல கொஞ்சம் சதை போட்டுட்ட! உனக்கு ஏண்டி இந்த இடம் இப்படி உப்பிடுச்சு?’ என்று மாற்றி மாற்றி கமெண்ட் அடித்துக் கொண்டனர். கண்களால் அளவெடுத்த பிறகு, கைகளால் ஸ்கேன் செய்ய ஆரம்பித்து பிறகு எங்கேயோ போய் நின்றது. 

மறுநாள் காலையில் ஹீரோயினுக்கு வீடியோ காலில் வந்தார் அவரது கணவர். ’ஏண்டி கீழ் உதடு வீங்குன மாதிரி இருக்குது? லேசா பிளட் தெரியுதே?’ என்று கேட்க, ’நேற்று ஷூட் முடிச்சுட்டு வர்றப்பவே செம்ம டயர்டு. தூக்கத்துல கடிச்சிருப்பேன் டா’ என்றபடி லைனை கட் செய்தார். நம்புவதும், நம்பாததும் கணவரின் விருப்பம்!

ஹூம் சினிமா தம்பதிக்குள்ளே இந்த ஃபார்மல் கேள்வியும், பொய்யான பதில்களும் சகஜமப்பா!