கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் தம்பதி, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டண்ட் சாகசங்களை செய்து அசத்தி உள்ளனர். 

ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் கலைஞர்களாக பணியாற்றி வருபவர்கள் கேப் ஜெசோப் மற்றும் ஆம்பிர் பாம்பிர். பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றிவந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கினர். இந்த காதல் ஜோடி அண்மையில் திருமணம் செய்துகொண்டுள்ளது. ஸ்டண்ட் கலைஞர்களான இவர்கள் திருமணத்திலும் ஸ்டண்ட் சாகசங்களை செய்து அசத்தி உள்ளனர்.

கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதி, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டண்ட் சாகசங்களை செய்து அசத்தி உள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியில் இவர்கள் கொடுத்த எண்ட்ரி, அங்கு வந்திருந்தவர்களை பதைபதைக்க வைத்தது. ஏனெனில், அவர்கள் இருவரும் உடலில் தீவைத்துக் கொண்டு ஜோடியாக நடந்து வந்தனர்.

View post on Instagram

அவர்கள் இருவரும் உடலில் தீவைத்துக்கொண்டு நடந்து வந்ததைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அது திட்டமிட்டு செய்யப்பட்ட சாகசம் என தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடலில் தீவைத்துக் கொண்டு அவர்கள் செய்த இந்த சாகச நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View post on Instagram

‘தீப்பிடிக்க... தீப்பிடிக்க முத்தம் கொடு டீ’னு பாட்டு தான் கேட்டிருப்போம், தற்போது அதனை நிஜத்திலேயே செய்துகாட்டி உள்ளது இந்த ஹாலிவுட் காதல் ஜோடி. அவர்கள் இருவரும் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இந்த சாகசத்தை அசால்டாக செய்துள்ளனர். இதை வேறு யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... AK 61 update : ஏ.கே.61-ல் வில்லனாக நடிக்கிறாரா ஆதி?... அஜித் உடனான சந்திப்பின் பின்னணி இதுதான்