Hollywood movie next to Priyanka Chopra is also Okay
நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் ‘ஏகிட் லைக் ஜாக்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஏ கிட் லைக் ஜாக்’என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இப்படத்தை பால் பெர்னான் தயாரிக்கிறார்.
இவரது படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகி உள்ளதகவலை பெர்னான் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா தான் பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் படமான ‘ஏ கிட் லைக் ஜாக்’ படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் ஜிம் பார்சன்ஸ், கிளாரி டேனிஸ், ஆக்டேவியா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
ஜாக் என்ற 4 வயது குழந்தை மற்றும் அதன் பெற்றோரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அப்பெற்றோரின் நண்பராக பிரியங்கா நடித்துள்ளார். கணவனை பிரிந்து வாழும் தாயாக, அமல் என்ற வேடத்தில் பிரியங்கா நடிக்கிறாராம்.
‘பேவாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி ரிலீசாக உள்ளது.
