Hollywood fame applause aval movie - Siddharth

சித்தார்த் நடித்த ’அவள்’ படத்தைப் பார்த்துவிட்டு ஹாலிவுட் பிரபலம் தி கிரேட் ரிச்சர்டு கிங் பாராட்டியுள்ளாராம்.

மிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்துள்ள படம் ‘அவள்’.

இந்தப் படம் கடந்த 3-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளை மிரட்டி வருகிறது. இப்படம் திரில்லர் திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தார்.

அந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது என்றுசித்தார்த் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஹாலிவுட் பிரபலம் தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார் சித்தார்த்.