பிரபல பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ், தற்போது நான்காவதாக கைப்பந்து விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜெனீபர் லோபஸ் 'அனகோண்டா', ' ப்ளாக் அண்ட் வைட்',  ஐஸ் ஏஜ்:  உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.  ஏராளமான பாப் பாடல், ஆல்பங்களில் பாடியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஜெனிபர் லோபஸுக்கு தற்போது 49 வயதாகிறது.  

இவர் ஓஜானி என்பவரை 1997இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரே வருடத்தில்,  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  அதன்பிறகு நடிகரும் நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவருக்கும் ஜெனிபர் லோபஸுக்கு 2001இல் திருமணமாகி 2003இல் விவாகரத்தும் ஆனது.

அதன்பிறகு பாடகரும் நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்த இருவரும் 2004 இல் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2014 இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நான்காவதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸ் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெனிபர் லோபஸ் காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஜெனிபர் லோபர்ஸ் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.