களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்து அதிக வாக்குகள் பெற்றுள்ள ஓவியாவுக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதோடு, சில இயக்குநர்களும், நடிகர்களும் ஓவியாவுக்கு தங்களது படங்களில் வாய்ப்பு கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல படங்கள் ஓவியாவுக்கு கிளிக்காகும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே “மெட்ராஸ்” பட நாயகன் சிரிஷ் தனது புதிய படத்தில் ஓவியாவுக்கு சான்ஸ் கொடுக்கயிருப்பதாக கூறியுள்ள நிலையில், தற்போது “யாமிருக்க பயமேன்” படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஓவியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்த ஓவியாவுக்கு இரண்டாம் பாகத்தில் வெயிட்டான வேடம் கொடுக்கப் போறாங்களாம்.

இதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து பாலாஜி தரணீதரன் இயக்கும் படத்திலும் ஓவியா நடிக்கயிருப்பதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் மூலம் ஓவியாவுக்கு இப்படி ஒரு லக் அடிச்சிருக்கு என்று பிக் பாஸை விட்டு வெளியே வந்தபிறகு தான் ஓவியாவுக்கு தெரியபோகுது.