கடந்த மாதம் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தேசிய ஊடகங்களிடம் இருந்து, பாராட்டை பெற்ற 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் தற்போது இந்தியின் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திருநங்கை வேடத்திலும், நடிகை சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் என அனைவரும் சர்ச்சைக்கு குறைவில்லாதா துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' முற்றிலும் மாறுபட்ட கதையாக இந்த படத்தை இயக்கி இருந்தார் தியாகராஜா குமாரராஜா.

இந்த படம் வெளியாக ஒரு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். பல பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த படத்தை ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல நிறுவனம் ஒன்று, இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், இந்தியிலும் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவே இயக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் மிகவும் சவாலான கதாப்பாத்திரங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளிய, சமந்தாவின் வேம்பு மற்றும் விஜய் சேதுபதியின் ஷில்பா கேரக்டர்களில் யார் நடிக்க உள்ளார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.