​தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா? என காண்போர் வெட்கி கூசும் வகையில் “இரண்டாம் குத்து” என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது. இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயினர். சமீபத்தில் வெளியான பாடல்களில் கூட இரட்டை அர்த்தங்களும், ஆபாச காட்சிகளும் அளவுக்கு மீறி இருந்தது. 

இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால்  “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் இந்த படத்தின் டீசரைப் பார்த்து கழுவி ஊத்ததவர்களே இல்லை எனும் அளவிற்கு தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் குத்து படத்திற்கும் தடை விதிக்கவும், டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க  வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 அதில் இரண்டாம் குத்து படத்தின் டீசரால் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், சமூகத்தை சீர்குலைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.  இன்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, இரண்டாம் குத்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், திரைப்படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, மத்திய தணிக்கைக் குழு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டிருந்தது. 

​இன்று மீண்டும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, “இரண்டாம் குத்து திரைப்பட டீசரில் இரட்டை அரத்தங்களுடன் நாகரீகமற்ற காட்சிகள் அமைந்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டுமென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வித நாகரீகமும் நன்னெறியுமின்றி படத்தில் காட்சிகள் உள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற காட்சியை அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.