மெர்சல்  படத்தின் டைட்டில் டிசைனில் இருந்து போஸ்டரில் மெ எழுத்தில் மாட்டுக்கொம்பு, ல் எழுத்தில் மாட்டின் வால் உள்ளது போன்று டிசைன் செய்யப்பட்டு மிரட்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிகில் போஸ்டர் மற்றும் டைட்டில் குறியீட்டை இன்ச் பை இஞ்சாக பிரித்து மேய்கின்றனர் ரசிகர்கள். 

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு, 3வது முறையாக அட்லி-விஜய் கூட்டணி சேர்ந்த படம் இது. எனவே பர்ஸ்ட் லுக் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போலவே, 2 கெட்அப்புகளில், விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரர் போல ஜெர்சி அணிந்து நின்றபடி உள்ளார். மற்றொரு விஜய் நடுத்தர வயதுள்ளவர் போல காட்சியளிக்கிறார். அவர் உட்கார்ந்த நிலையில் உள்ளார். சுற்றியுள்ள இடத்தை பார்க்கும்போது அது  கருவாட்டு சந்தை என்பது தெரிகிறது. கருவாடு, மீன் போன்றவை விற்பனைக்கு உள்ளன. உட்கார்ந்திருக்கும் தளபதி விஜய் காவி வேட்டி, நெத்தியில குங்கும போட்டு, கழுத்தில் சிலுவை டாலர் கட்டியுள்ளார்.

விஜய்க்கு முன்பாக, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் ஒரு கறி கட்டை , அதன்மீது அரிவாள் ஒன்று வெட்டி வைக்கப்பட்ட நிலையில் உள்ளது. காவி வேட்டி கட்டியுள்ள விஜய், அந்த பகுதி தாதாவாக இருக்க கூடும் என்கிறார்கள். வட சென்னை வாழ்க்கை முறையை வைத்து, மற்றொரு மெட்ராஸ் படம் போல இது உருவாகுவது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தால் தெளிவாக தெரிகிறது.  

மேலும், பிகில் படத்தில் விஜய் புத்தம் புதிய டோப்பா பயன்படுத்தியிருப்பது தெரிகிறது. மேலும் அவரது கண்களில் கான்டேக்ட் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. மீன் வியாபாரியான தந்தை விஜய் மீனவ குப்பத்தின் ராஜாவாக காட்டப்படுவது உறுதி. இது மட்டும் அல்லாமல் படத்தின் டைட்டிலான பிகில் வடிவமைப்பை பார்க்கும் போது அது ஒரு மைதானத்தை நினைவுபடுத்துகிறது. கடைசியில் 'ல' மீன் உருவமும், மேலே வைக்கப்பட்டுள்ள புள்ளி புட்பால்  போல இருக்கிறது. மெர்சல் டைட்டிலில் 'மெ' எழுத்தில் மாட்டுக்கொம்பு, ல் எழுத்தில் மாட்டின் வால் உள்ளது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

வட சென்னையில் கிரிக்கெட்டை ரசிப்பவர்களை விட புட் பாலுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. ஒரு கெட்டப்பில் பிளேயராகவும், இன்னொரு வயதான தோற்றத்தில் உள்ள விஜய் நார்த் மெட்ராஸ் மீனவ குப்பத்தை சேர்ந்த லோக்கல் டானாகவும் இருப்பது போல தெரிகிறது.