Hero make lament the heroins
தல நடிகர் நடித்து வெளியாகவிருக்கும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஒல்லி நடிகர் நடிக்கும் படத்தின் டீசர் அதன் பின் வெளியானது.
இரண்டிலும் உடன் நடித்த நடிக நடிகைகள் தங்கள் காட்சிகளை காண்பிக்கவே இல்லை என்று கோபத்தில் இருக்கிறார்களாம்.
என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் வில்லன் மற்றும் ஹீரோயின்களையும் டீசரில் காட்டுவது தான் வழக்கம்.
ஆனால் இதில் வழக்கத்துக்கு மாறாக நடிகரை மட்டும் தான் காட்டினார்கள். இரண்டு பெரிய ஹீரோயின்களுடன் பாலிவுட்டின் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாகவும் நடிக்கிறார்.
அவரையும் இருட்டடிப்பு செய்தது நியாயமே இல்லை என்று குரல்கள் எழுகின்றன. இதேபோல் ஒல்லி நடிகர் படத்திலும் ஒரு பாலிவுட் நாயகி வில்லியாக நடிக்கிறார். அவரையும் காட்டவில்லை
கடுப்பான கோ ஆர்ட்ட்டிஸ்ட்கள் ‘படம் முழுக்கவும் அவரையே காட்டியிருக்க வேண்டியது தானே... படத்துல மட்டும் நாங்க எதுக்கு...?’ என்று புலம்புகிறார்களாம்.
