Asianet News TamilAsianet News Tamil

அவரால் காருக்கு டியூவ் கட்ட முடியல... கலங்கும் இயக்குநர் சுப்ரமணிய சிவா..!

சில எதிர்மறை, காசு சம்பாதித்து விட்டார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால், காருக்கு டியூவ் கட்ட முடியாததை வெளியில் சொல்லாமல் தான் இருந்தார். 

He can't build a duo for the car ... Disturbed director Subramania Siva ..!
Author
Tamil Nadu, First Published May 31, 2021, 5:55 PM IST

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நடிகரும், தயாரிப்பாளருமான வெங்கட் சுபா மீது சில எதிர்மறை, காசு சம்பாதித்து விட்டார் என்ற விமர்சனமும் உண்டு என இயக்குநர் சுப்ரமணிய சிவா தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெங்கட் சுபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 29ம் தேதி உயிரிழந்தார்.

He can't build a duo for the car ... Disturbed director Subramania Siva ..!

இந்நிலையில் வெங்கட் சுபா பற்றி இயக்குநர் சுப்பிரமணிய சிவா தன் ஃபேஸ்புக் பக்கத்தில், ‘’வெங்கட்டா, சுபா வெங்கட் என்றழைக்கப்படும் வெங்கட் சார். சாலிகிராமம், பாரதியார் தெரு பிரகாஷ்ராஜ் சார் ஆபிஸில் நான் 'தயா' படத்தில் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றிய போதிலிருந்தே எனக்குப் பரிச்சயமானவர். வெங்கட் சார் கலைகளின் காதலன். ஒரு நல்ல புத்தகம் படித்தால், ஒரு நல்ல படம் பார்த்துவிட்டால், ஒரு சுவாரசியமான செய்தி தெரிந்துகொண்டால், அது யாருக்குத் தேவையாக இருக்குமோ அவர்களிடம் உடனடியாகப் பகிர்ந்து கொள்வார். அதில் அவருக்கான ஆதாயம் என்ன என்பதைக் கூட கருத்தில் கொள்ள மாட்டார்.

அவர் மேல் சில எதிர்மறை, காசு சம்பாதித்து விட்டார் என்ற விமர்சனமும் உண்டு. ஆனால், காருக்கு டியூவ் கட்ட முடியாததை வெளியில் சொல்லாமல் தான் இருந்தார். அதைப் பற்றி ஒரு நாளும் கவலையோ சுணக்கமோ இல்லாமல், சினிமாத்துறை வளர்ச்சிக்கான ஏதாவது யோசனையை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டே இருப்பார். விதுரன் யூடியூப் சேனலில் தங்கு தடையின்றி அருமையாகப் பேசுவார். எத்தனையோ பேரின் உயர்வுக்குக் காரணமாக இருந்தார். மகன் சித்தார்த்தை இயக்குநராக்கப் பெருங்கனவை மனதில் சுமந்திருந்தார். நண்பர்களுக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக நின்றார். இப்படி நிறையச் சொல்லலாம் வெங்கட் சாரைப் பற்றி. திரும்பி வந்துவிடுவார் என்று தான் நானும் இருந்தேன்

.He can't build a duo for the car ... Disturbed director Subramania Siva ..!

இன்று அவர் இல்லை. சுபா அண்ணிக்கோ, சித்தார்த்துக்கோ, குடும்பத்தாருக்கோ, அவர் நண்பர்களுக்கோ ஆறுதல் சொல்ல என்ன இருக்கிறது. வணக்கமும், நன்றியும் வெங்கட் சார். இறைவனின் திருவடியில் இளைப்பாறுங்கள்’’எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios