என்னா பாசம்... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் கமல் மகள்கள்... லைக்குகளை குவிக்கும் அக்கா, தங்கை சேட்டை புகைப்படம்...!

உலக நாயகன் கமல் ஹாசன் நேற்று 65வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான பரமக்குடியில் சிறப்பாக கொண்டாடினார். அன்றைய தினம் தனது தந்தையின் நினைவு தினம் என்பதால், அவரது தந்தை ஸ்ரீனிவாசனின் திருவுருவச் சிலையையும் திறந்துவைத்தார். இதில் கமல் ஹாசனின் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதையடுத்து இன்று ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கமல் ஹாசனின் செல்ல மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் பங்கேற்றனர். அக்கா, தங்கை இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கம் நிறுவனம் சத்யா, அபூர்வ ராகங்கள், ஹேராம், விஸ்வரூபம், உத்தம வில்லன், விக்ரம், தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. டி.டி.கே.சாலையில் உள்ள அந்த புதிய கட்டிடத்தை கமல் ஹாசனின் ஆத்ம நண்பரான ரஜினிகாந்த் திறந்துவைத்தார். இதையடுத்து கமல், ரஜினியின் குருநாதரான மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையையும் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்துவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர்களும், கமலின் நண்பர்களுமான நாசர், ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றன.

விழாவில் ரஜினி, கமல் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயத்தில் கமல் ஹாசனின் அழகு மகள்களான ஸ்ருதியும், அக்சராவும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். பிளாக் அண்ட் ஒயிட் உடையில் ஹாசன் சகோதரிகள் எடுத்துள்ள க்யூட் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அதிலும் அக்சரா கொடுத்துள்ள சேட்டை போஸ், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.