Haryanvi singer : காணாமல் போன பாடகி உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்பு... கண்ணீரில் திரையுலகம்

Haryanvi singer : இசை வீடியோ எடுக்க உள்ளதாக கூறி வரவழைத்து 26 வயதே ஆன இளம் பாடகியை 2 இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Haryanvi singer Sangeeta found dead in Rohtak 2 accused arrested

ஹரியானாவை சேர்ந்தவர் பாடகி சங்கீதா. டெல்லியில் வசித்து வந்த சங்கீதா கடந்த மே 11-ந் தேதி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து சங்கீதா கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை தேடும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். 

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பைனி பைரன் எனும் கிராமத்தில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பிணமாகக் கிடந்தது சங்கீதா தான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கீதாவை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Haryanvi singer Sangeeta found dead in Rohtak 2 accused arrested

பின்னர் இது தொடர்பாக ஹரியானா மாநிலம் மேஹம் பகுதியைச் சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனனர். விசாரணையில் சங்கீதாவை திட்டமிட்டு கொலை செய்ததை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இசை வீடியோ எடுக்க உள்ளதாக கூறி பாடகி சங்கீதாவை அழைத்துவந்து அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சங்கீதாவை கழுத்தை நெரித்து கொன்றதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர், இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாடகி சங்கீதா கொலை செய்யப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... BiggBoss 6 : பிக்பாஸ் 6-க்கு முதல் போட்டியாளர் ரெடி! அட இவங்களா... வனிதா ரேஞ்சுக்கு கண்டண்ட் கொடுப்பாங்க போலயே

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios