உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். நாளுக்கு நாள் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸிடம் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் சிக்கித்தவிக்கின்றன. 

இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்!

தினமும் காட்டுத்தீ போல் பரவி வரும் இந்த வைரஸுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் டாம் ஹாங்க்ஸ், ஓல்கா குரிலென்கோ, அமெரிக்க பாப் பாடகர் பிங்க், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!

இந்நிலையில் ஹாரிபாட்டர் நாவல்களை எழுதிய ஜே.கே.ரெளலிங், கொரோனா அறிகுறியுடன் இருந்து தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், கொரோனா அறிகுஇயில் இருந்து மீள்வது எப்படி என்று குயின்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த இந்த மருத்துவர் கூறும் அறிவுரைகளை கேளுங்கள். இரண்டு வாரங்களாக எனக்கு கோவிட் 19 அறிகுறிகள் இருந்தது. நான் எவ்வித பரிசோதனைகளையும் செய்யவில்லை. நான் முற்றிலும் குணமடைந்துவிட்டேன். இவர் சொன்ன முறை எனக்கு மிகவும் உதவியது. இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு இதோ....