harries jayaraj join karthick movie

கார்த்தியுடன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் வினய், பாவனா நடித்த ஜெயம் கொண்டான் படத்தினை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரஜத். தற்போது இவர் கார்த்தியை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுவே ரஜத்திற்கு முதல் படமாகும். 

மீண்டும் கார்த்தி ரகுல்பிரீத் சிங்

"தீரன் அதிகாரம் ஒன்று" படத்தில் நடித்த கார்த்தி ரகுல் பிரீத் சிங் ஜோடி பெரிதாக பேசப்பட்டது. காதல் காட்சிகளில் இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவர்கள் என்று காத்திருந்தனர். முத்தாய்ப்பாக இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 


ஹாரிஸ் ஜெயராஜ்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சிறப்பு செய்தியாக இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்தி கூட்டணி இணைகிறது. இதனால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் விவசாயியாக நடிக்கிறார் கார்த்தி. இந்த படம் முடிவடைந்த பின், ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.