நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள, 'பார்க்கிங்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ள இப்படம், சொந்த வீட்டில் இல்லாமல்... கார் பார்க்கிங் வசதி இல்லாமல்... கார் வாங்கி, அதனை நிறுத்தி வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும், ஒரு சாமானிய பற்றிய கதை. ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ள இந்த படத்தில், எம்எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்று நயன்தாராவின் அன்னபூரணி படத்துடன் மோதியுள்ள இப்படம், ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? இல்லையா? என்பதை ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம்!!

பார்க்கிங் படத்திற்கு 3.75/5 மதிப்பீடு கொடுத்துள்ள ரசிகர் ஒருவர் கூறுகையில், "ஒரு எளிமையான கதைக்களத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர். முதல் பாதி, கொஞ்சம் நீளமாக இருப்பது போல் உணரமுடிகிறது. ஆனால் இரண்டாம் பாதி அபாரமான மோதலுடன் அசாதாரணமாக இருந்தது. இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் உச்சகட்ட பரபரப்பு. SamCS இசை படத்துடன் பொருத்தி செல்கிறது. ஹரிஷ்கல்யாண் & எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் அசத்தியுள்ளார். மொத்தத்தில் ஒரு நீட்... த்ரில்லர் பட ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இப்படம் குறித்து போட்டுள்ள பதிவில், பார்க்கிங் என் மனதை உலுக்கியது. ராம் குமார் பாலகிருஷ்ணா, சிறந்த எழுத்துகளில் கலக்கிட்டீங்க வாழ்த்துகள் அண்ணா. எம்.எஸ்.பாஸ்கர் சார், நீங்கள் மிகவும் எளிமையாக நடிப்பில் அடித்து நொறுக்கி உள்ளீர்கள். சினிஷ் இந்த மொத்த குழுவினரையும் ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். மேலும் ஹரிஷ் கல்யாண் வாழ்த்துக்கள். நிச்சயமாக பிளாக்பஸ்டர் படமாக அமையும் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

நடிகர் கெளதம் கார்த்தி இப்படம் குறித்து கூறியுள்ளதாவது, "நேற்று பார்க்கிங் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அதை நான் மிகவும் ரசித்தேன்! இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணாவின் சிறந்த படைப்பு. ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கு படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அதிரவைத்தது. இத்தகைய தலைசிறந்த பணிக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்! என தெரிவித்திருந்தார்.

Scroll to load tweet…

நடிகர் சதீஷ் இப்படம் குறித்து கூறியுள்ளதாவது, "பார்க்கிங் சூப்பர் படம். ஹரிஷ் கல்யாண் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் எம்.எஸ்.பாஸ்கர் அண்ணா மற்றும் இந்துஜா கலக்கி உள்ளனர். இயக்குனர் ராம் குமார் கிருஷ்ணாவின் சிறந்த படைப்பு, சாம் சி.எஸ்.இசை அபாரம் என இபபடத்தின் படக்குழுவை புகைழந்து தள்ளியுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு ரசிகர் இப்படம் குறித்து போட்டுள்ள பதிவில், எந்த பரபரப்பும் இல்லாமல் போய் "இது சினிமா" என்று வெளிவந்தது. ஒன்லைன் ட்ராமாவை எப்படி திரில்லர் நாடகமாக மாற்றினார்கள் என்று நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஹரிஷ் கல்யாண் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பின் அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் எம்.எஸ்.பாஸ்கர்! மொத்தத்தில் ஒரு வார இறுதியில் பார்க்க வேண்டிய படம்! பார்க்கிங் என தெரிவித்துளளார்.

Scroll to load tweet…

பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை, இந்த படத்தை... புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றனர். மேலும் நயன்தாராவின் 'அன்னபூரணி' கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பார்க்கிங் நல்ல விமர்சனந்த்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.