Hari Surya Do not be afraid of lion 4

நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

சூர்யாவை வைத்து கடைசியாக ஹரி ‘சிங்கம் 3’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிங்கம் படத்தின் நான்காவது பாகம் உண்டா என்றதற்கு நான்காவது பாகம் வராது என ஹரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் த்ரிஷாவை வைத்து ‘சாமி’’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் ஹரி.

இந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அது நிச்சயம் சிங்கம் 4-ஆக இருக்காது என்று கூறி நம் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் ஹரி.

மேலும், “சூர்யாவை வைத்து எடுக்கும் படம் புதிய கதையாக இருக்கும். அதே நேரத்தில் எனது பாணியில் வேகமான திரைக்கதை ஓட்டத்துடன் கூடிய படமாக இருக்கும். ஆனால் அது போலீஸ் கதையாக இருக்காது” என்றார்.