பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் தான் கவர்ச்சி குத்தாட்ட நடிகை சுஜா களமிறங்கினார். இவர் வந்து முழுவதும் ஒரு நாள் கூட ஆகாத நிலையில், எந்த வித பரபரப்பும் இல்லாமல் சுவர் எகிறி குதித்து உள்ளே வந்துள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இவர் கயல் ஆனந்தியுடன் பொறியாளன், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சுவர் எகிறி குதித்து திடீர் என உள்ளே வருவது போல் இன்றய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் உள்ளே வரும் ஹரிஷ் கல்யாண், தனக்கு மிகவும் பசிக்கிறது உடனடியாக தனக்கு சாப்பிட எதாவது வேண்டும் என கூறுகிறார், உடனே அனைத்து போட்டியாளர்களும் போட்டி போட்டுகொண்டு  அவருக்கு உணவு தயார் செய்கின்றனர்.

பின் சினேகனிடம் சென்று "ஆரவால் மருத்துவ முத்தம் வெளியே பிரபலமாகியுள்ளது, அதே போல உங்களுடைய கட்டிப்பிடி வைத்தியமும் பிரபலமாகியுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளாரா? விருந்தினராக வந்துள்ளாரா? என இன்று தான் தெரியவரும்.