ஹரே  இயக்குனர் நவீன் பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா? என திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

திரெளபதி படத்தின் ட்ரெய்லர் மட்டும் தான் ரிலீசாகி இருக்கிறது. ஆனால் அந்த ஜூவாலை எட்டுத்திக்கும் பரவி எச்சரிக்கை மணியடித்து வருகிறது. நாடகக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தை ஒரு பிரிவினர் ஆதரித்தும், இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் 17 வயது சிறுமி ஒருவரை வாலிபர் ஒருவர் நாடகக் காதல் மூலம் ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு மீண்டும் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டது குறித்த செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் வீடியோவை மேற்கோள் காட்டிய ‘திரெளபதி’இயக்குனர் ஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’’நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே  இயக்குனர் நவீன் பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்’’ என்று பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு ஆதரவாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.