சில வருடங்களாகவே இந்தி[ய] சினிமாவின் கவனத்தை தன் பக்கம் உற்று நோக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் அடுத்த சர்ப்ரைஸாக ஒரே நாளில் இரண்டு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இரண்டு முக்கிய படங்களில், அதுவும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஒருவர் இர்பான் பதான். அடுத்தவர் பல மாதங்களாகவே அழகு தமிழில் ட்விட்கள் போட்டுக்கொண்டிருக்கும் ஹர்பஜன் சிங்.

நேற்று மாலை ஒரு சர்ப்ரைஸ் செய்தி இருக்கிறதென்று அறிவித்து தங்கள் படத்தில் இர்பான் பதான் விக்ரமுடன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே சந்தானத்தின் டிக்கிலோனா’படத்தில் ஹர்பஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார். சரி தமிழ்ப்படங்களில் நடிப்பது குறித்து இருவரும் என்ன சொல்கிறார்கள்?

இர்பான் பதான்,’நான் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், சினிமா, எனக்கு நிச்சயமாக புதிய உலகம். இயக்குநர் அஜய் ஞானமுத்து, வடதோராவில் உள்ள எனது வீட்டுக்கு வந்து கதை சொன்னார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி, எதற்கு நான் நடிக்கணும்? என்பதுதான். அவர் அந்த கேரக்டரையும், நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று சொன்னதை கேட்டதும் சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிப்பது பெருமையான விஷயம். அவர் சிறந்த நடிகர். ஏராளமான பார்வையாளர்கள் முன்பு நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்குப் பதற்றம் ஏதும் இல்லை. அந்த உணர்வோடு எந்தப் பதற்றத்தையும் ஒப்பிட முடியாது. குறைந்தபட்சம் சில ரீடேக்குகள் வாங்குவேன்.மற்றபடி தமிழ் ரசிகர்கள் என்னை ரசிக்கவே செய்வார்கள்’.

ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,...என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் @kjr_studios,#dikkiloona @SoldiersFactory@iamsanthanam
 குழுவுக்கு நன்றி.#தலைவர் #தல #தளபதி உருவாகிய பூமி.#தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே.உங்களால் வெள்ளித்திரையில்.இந்த  வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்...என்று தெரிவித்திருக்கிறார்.