Hansika Motwani with Whiskey : கஞ்சாவை தொடர்ந்து விஸ்கி ... ஹன்ஷிகாவின் போஸால் கடுப்பான நெட்டிசன்கள்...
விஸ்கி பாட்டில் ஒருபுறம், விஸ்கி டம்ளர் ஒருபுறம், சைடிஸ் ஒருபுறம் என கிக்காக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ள ‘மஹா’ படம் இந்து மதத்தையும் அதன் பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ‘90 எம்.எல்’ படத்தில் நடிகை ஓவியா கஞ்சா அடிப்பதுபோல் இப்படத்தில் நடிகை ஹன்ஷிகா கஞ்சா அடித்து போஸ் கொடுத்துள்ளார்.
ஜமீல் என்னும் புதுமுக இயக்குநர் எட்செட்ரா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியை நாயகியாகக் கொண்டு ‘மஹா’ என்ற படத்தை இயக்கிவருகிறார். புனித ஸ்தலம் ஒன்றில் காவி உடையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஹன்ஷிகா கஞ்சா புகைத்த இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகின.
இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பெண் துறவிகளை கொச்சைப் படுத்துவது போல அமைக்கப்பட்டுள்ள காட்சியில் நடித்த நடிகை ஹன்ஷிகா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஹன்ஷிகா சர்ச்சை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விஸ்கி பாட்டில் ஒருபுறம், விஸ்கி டம்ளர் ஒருபுறம், சைடிஸ் ஒருபுறம் என கிக்காக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.