பாலிவுட் திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஹன்சிகா நடிகர் தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கிய 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்',' ஓகே ஓகே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தைப் பெற்றார்.

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களாகவே அமைந்தது. கடைசியாக இவர் நடிப்பில் 'குலேபகாவலி' படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

'குலோபாகவலி' படத்தை தொடர்ந்து தன்னுடைய எடையை குறைத்து படவாய்ப்புகளை பிடித்துள்ள ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் முனுசாமி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

அதில் அவர், இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை பெற்றுத்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.