hansika acting in vikram prabu movie

 கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடித்த படம் குலேபகாவலி. இந்நிலையில் குலேபகாவலியும் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ஹன்சிகாவிற்கு வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லை. கடந்த ஆண்டு ஹன்சிகா, ஜெயம் ரவி நடித்த போகன் படம் மட்டுமே தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் தற்போது மார்க்கெட் குறைந்ததால் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ஹன்சிகா.

இந்த நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் துப்பாக்கி முனை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் விக்ரம் பிரபு இணைந்த படம் அரிமா நம்பி. இந்த படம் ஓரளவு வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு விக்ரம் பிரபு நடித்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ,அவரின் பெயருக்கு பின்னால் வைத்துக்கொண்ட வீரத் திலகம் என்ற பட்டத்திற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

 தமிழில் படங்கள் இல்லாததால் மார்கெட் குறைந்த விக்ரம் பிரபுவுடன் இணைகிறார் ஹன்சிகா. இது தவிர எஸ்.எஸ் சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த பக்கா என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.