ஸ்டண்ட் மாஸ்டர் சொன்னதையும் மீறி டூப் போடாமல் பல்டி அடித்ததால் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ரத்தக்காயம் அடைந்தார். உடனே படப்பிடிப்பு தளத்துக்கு மருத்துவர்கள் முதல் உதவி அளித்தவுடன் மீண்டும் அதே பல்டியை அடித்து ஷாட்டை ஓகே செய்தார்.

நேற்று இணையங்களில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் அந்தரங்கப்படங்கள் சில பகிரப்பட்டு வைரலாகின. அதை பப்ளிசிட்டிக்காக அவரேதான் பரப்பினார் என்ற செய்திகளும் உலவியதால், படப்பிடிப்பில் மிகவும் டென்சனுடன் காணப்பட்டார். அதைப் புரிந்துகொண்ட ‘மஹா’ பட இயக்குநர் யூ.ஆர். ஜமீல், ஹன்ஷிகா குட்டிக்கரணம் அடிக்கவேண்டிய ஒரு காட்சியை சொல்லிக்கொடுத்துவிட்டு அதை டூப் ஒருவரை வைத்து எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்ஷிகா, தானே அந்த ஷாட்டில் நடிக்க முயன்றபோது, டைமிங் மிஸ் ஆகி ஒரு சிறிய விபத்தை சந்தித்தார். அதில் அவருக்கு முட்டியில் ரத்தக்காயம் ஏற்பட்டது. உடனே அவசர அவசரமாக ஒரு டாக்டர் தலைமையில் முதல் உதவிக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கப்பட்டு, ஹன்ஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

‘மஹா’ படம் இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், ரிலீஸ் சமயத்தில் இப்படத்துக்கு தடைகோர பல இந்து சமய அமைப்புகள் காத்திருக்கின்றன.