தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கி வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.  பெரிய நடிகர்களுடன் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது,  இரண்டு அல்லது மூன்று படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார்.

இறங்குமுகமாக இருந்த திரிஷாவை '96 படம்' சற்று காப்பாற்றி அவருடைய மார்க்கெட்டின் அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது. 

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி பிடிக்கிறார் திரிஷா.  நயன்தாரா,  திரிஷா வழியில் ஹன்சிகாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.  நயன்தாரா, திரிஷா ஆகிய இருவரையும் விட ஹன்சிகா குறைந்த சம்பளம் வாங்குவதால், பட அதிபர்கள் பார்வை ஹன்சிகா மீது திரும்பியுள்ளது.

நிவேதா பெத்துராஜ்:

நிவேதா பெத்துராஜ், துபாயில் வளர்ந்தவர். படித்ததும் அங்குதான்.  'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து 'டிக் டிக் டிக்', 'திமிர்பிடித்தவன்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவர் முன்னணி கதாநாயகியாக உயர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புடன் நிவேதா பெத்துராஜ் காத்திருக்க, கிடைத்தது ஏமாற்றம் தான்.   புது பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை அதனால் அவர் சில கதாநாயகர்களுக்கு போன் போட்டு, பட வாய்ப்பு  கேட்பதாக தகவல் பரவி இருக்கிறது. கவர்ச்சி காட்டவும் டபுள் ஓகே சொல்லுகிறாராம் அம்மணி.