சில தினங்களுக்கு முன்பு ஹன்ஷிகா மோத்வானியின் அந்தரங்கமான படங்கள் சில வலைதளங்களில் வைரலாகிப் பரபரப்பை உண்டாக்கியிருந்தன. அதையும் விட ஹாட்டாக அவற்றை பப்ளிசிட்டி காரணங்களுக்காக வெளியிட்டவரே ஹன்ஷிகாதான் என்றொரு செய்தியும் இணையக்களில் வலம் வந்தது.

மேற்படி சமாச்சாரங்களுக்கு, சற்றே தாமதமாக, தனது ஆதங்கத்தையும் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார் ஹ்ன்ஷிகா. அது குறித்துப் பேசிய அவர்,’ சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தபோது எனது செல்ஃபோன் ரிப்பேராகிவிட்டது. அது செயல்படாத நேரத்தில் எனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஹேக் செய்தவர்கள் திருட்டுத்தனமாக அப்படங்களை வெளியிட்டுவிட்டார்கள். அவை அத்தனையும் ஒரிஜினல் படங்களும் அல்ல. அவற்றில் சில மார்ஃபிங் செய்யப்பட்டவை.

அந்தப் படங்களை வெளியிட்ட பாவச்செயலை விட கொடூரமானது. அவற்றை விளம்பரத்துக்காக நானே வெளியிட்டேன் என்று செய்திகள் பரப்பியது. எனது முதல் படக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக படங்கள் கிடைத்து இன்றுவரை பிசியாகவே இருக்கிறேன்.அப்படியிருக்க எனது அந்தரங்கப் படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடும் நிலையிலா நான் இருக்கிறேன். இவ்வளவு குரூரமாக சிந்திப்பவர்களை நினைத்தால் கோபத்தை விட பரிதாப உணர்ச்சியே அதிகம் மேலிடுகிறது’ என்கிறார் ஹன்ஷிகா.