படம் வெளியாகும் முன்னரே செம ஹிட் கொடுத்த அரபிக் குத்து பாடல் தற்போது வீடியோ சாங் வடிவில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன் , ஷைன் டாம் சாக்கோ , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி , VTV கணேஷ் , ஷாஜி சென் , அபர்ணா தாஸ் , சதீஷ் கிருஷ்ணன் , லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே தோன்றியிருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அனிரூத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டிருந்தார். தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது. சென்னை ,டெல்லி மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட்டது.

வீரராகவனாக விஜய் வரும் விஜய் முன்னாள் ராணுவ வீரராக இருக்கிறார். அவர் வேலைக்காக வரும் மாலை தீவிரவாதிகள் கைப்பற்றுகின்றனர் .பின்னர் எவ்வாறு அங்கு சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையத்தை. போர்க்களத்திற்கு இடையே காதல், காமெடி என ரசிகர்களை கவர்ந்து விட்டது. நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படித்தது பீஸ்ட் .
படம் வெளியாகும் முன்னரே அரபிக் குத்து பாடல் முதல் சிங்குளாக வெளியாகி ரசிகர்களை குதுக்கப்படுத்தியது. இந்த பாடல் ரீல்ஸ் வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அரபிக் குத்து ஸ்டெப் போட்டனர். இந்த பாடல் யூடியூப்பில் மட்டும் 200 மில்லியன் வியூவர்ஸுக்கு மேல் வெளியான கொஞ்ச நாட்களில் பெற்றிருந்தது. இந்த பாடலை அனிரூத், ஜோனிதா காந்தி பாடியிருந்தனர்.

தற்போது இந்த பாடல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பீஸ்ட் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் சமீபத்திய பதிவில் அரபிக் குத்து பாடல் வீடியோ சாங் வடிவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அதோடு நாளை ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
