பிரபல தொலைக்காட்சி நடிகைக்கும், அவருடைய சிகை அலங்கார நிபுணருக்கு எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, நடிகையை அவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராக மாதுரி தெலுங்கு தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார். இவரிடம்  ஜோதிகா என்கிற பெண் சிகை அலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இவருடைய சிகையலங்கார நிபுணருக்கும் , நடிகைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக நடிகையை படப்பிடிப்பிலேயே ஜோதிகா, மோசமாக தாக்கியதால், நடிகை ராக மாதுரி படுகாயம் அடைந்தார். இதனால் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் 16ஆம் தேதி, ராக மாதுரி படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, இவர் வைத்திருந்த, விலை உயர்ந்த செயினை காணவில்லை.  எனவே இதுகுறித்து பஞ்சாரி ஹில்ஸ் காவல் நிலையத்தில், நடிகை புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் சம்மந்தமாக போலீசார் நடிகையுடன் இருக்கும் அனைவரிடமும் விசாரணை  மேற்கொண்டதாக தெரிகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக மிகவும் கோபமடைந்த சிகை அலங்கார நிபுணர் ஜோதிகா இவரை தாக்கியதாக கூறப்படுகிறது.