’குக்கூ’,’ஜோக்கர்’ படங்களை அடுத்து இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள ‘ஜிப்ஸி’ படத்தின் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் நேற்று பிரசாத்லேப்பில் வெளியிடப்பட்டது. சந்தோஷ் நாராயண் இசையில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள அப்பாடல் ஒளிபரப்பு முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் பலரும் பரவசப்பட்டு கரகோஷம் செய்தனர்.

தமிழக காவல்துறையின் கோரமுகத்தையும், அரசியல்வாதிகள், சமூகக்குற்றவாளிகள் என்று அனைவரையும் கிழித்துத் தொங்கவிடும் அப்பாடலில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, சமூக செயல்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, பியூஸ் மனுஷ், வளர்மதி, இயக்குநர் ராஜுமுருகன், இசையமைபாளர் சந்தோஷ் நாராயண் ஆகியோருடன் நாயகன் ஜீவாவும் தோன்றுகிறார்.

பலத்த கரகோஷத்துக்காக காரணத்தைத் தெரிந்துகொள்ள இந்த பாடல்வரிகளைப் படித்துப்பாருங்கள்..

வெரி வெரி  பேட்... பேட் டு த கோர்...

காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு எங்கள அடிக்கிற ...காக்கி கலரு காக்கி கலரு எதுக்கு கழுத்த நெரிக்கிற?
செத்துப்போன ஆளுக்கெல்லாம் சிலைய நீயும் திறக்கிற... இத்துப்போன எங்களை ஏண்டா திரும்பத்திரும்ப உதைக்கிற?
ஷ்டேசனுல ஏண்டா கட்டப்பஞ்சாயத்து நடத்துற...ஏவி விட்ட dogக்கெல்லாம் எலும்புத்துண்டைப் பொறுக்குற..
பதவி வெறி அக்கியூஸ்டுக்கெல்லாம் பண்ணுறியே ஊழியம்...எங்களப் போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்? [வெரி வெரி பேட்]

கேங் ரேப்பு செஞ்சவனோ போறான் பாரு காருல...நாலு மர்டர் செஞ்சவன பார்த்தேன் ஷாப்பிங் மாலுல...
கொள்ளையடிச்ச மந்திரிமாரு வர்றான் ஹெலிபேடுல...பொறுக்கிக்கெல்லாம் படா சைஸு பேனருதான் ஊருல...
அவனையெல்லாம் கூண்டுல ஏத்த உனக்கிருக்கா தைரியம்...எங்களப் போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்? [வெரி வெரி பேட்]

செயினை அறுத்த பேர்வழிதான் செல்ஃபி எடுத்து அனுப்புறான்...கூலிப்படைத் தலைவனும்தான் உனக்குக் கேக்கு ஊட்டுறான்...
சாதிக்கொலைகாரனெல்லாம் டி.வி.பேட்டி குடுக்கிறான்...மீதியிருக்கும் திருடனெல்லாம் இபிகோவைக் கிழிக்கிறான்...
அவனையெல்லாம் கூண்டுல ஏத்த உனக்கிருக்கா தைரியம்...எங்களப் போட்டு மிதிக்கிறியே இதா ஜனநாயகம்? [வெரி வெரி பேட்]

விதைச்ச நிலத்துல எத்தனை எத்தனை பில்டிங்கு...ஊரைவிட்டுத் துரத்துறியே எங்கே போச்சி என்பங்கு?
எங்க மண்ணப் புடுங்குனவன் ஏரோபிளானில் பறக்குறான்...சொந்த சனங்க சுருண்டு படுக்க ஜெயிலு கதவைத் தொறக்குறான்...
என்னான்னு கேட்டாக்க குண்டாஸுல போடுகிறான்...வெரி வெரி பேட்...