g.v.prakash twit

தமிழக விவசாயிகள் கடந்த 33 நாட்களாக தொடர்ந்து தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விடா முயற்சியோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று டில்லியில் தங்களுக்கு நியாயம் வேண்டி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிண்டியில் இயக்குனர் கௌதமன் மற்றும் இளைஞர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது பின் அந்த கூட்டத்தை கலைப்பதற்காக, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொண்டாடப்பட்டு வரும் தமிழ்ப் புத்தாண்டிற்கு அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எம் விவசாயிகள் என்றைக்கு மகிழ்ச்சியோடு செல்கிறார்களோ அன்றைக்குத்தான் இனிய புத்தாண்டு என்று உருக்கமாக கூறியுள்ளார்.