இசையமைப்பாளராக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த ஜி.வி.பிரகாஷ் இன்று நடிகராக சாதித்து வருகிறார். 

அதே போல சினிமாவில் மட்டும் பிரச்சனை என்று சொன்னால் வந்து போராடும் ஹீரோ அல்ல நிஜத்திலும் போராடுவோம் என ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி இளைஞர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

மேலும் மெரினா மற்றும் அலங்காநல்லூரில் போராடிய பலருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து பலர் மனதில் இடம் பிடித்தார். 

அது மட்டும் இன்றி ஜல்லிக்கட்டுக்காக கொம்பு வச்ச சிங்கம்டா பாடலை இவரும் இவரது நண்பர் பாடகர் அருண்ராஜ் காமராஜ் என இருவரும் பாடி இசையமைத்து வெளியிட்டனர்.

தற்போது ஜி .வி .பிரகாஷ் இப்பாடலின் மூலம் கிடைத்த வருமானத்தை விவசாயிகளுக்காக வழங்க உள்ளதாகவும் மேலும் விவசாயிகளின் நலனுக்காக தற்போது ஒரு புது முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி விரைவில் விவசாயிகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்போவதாகவும் அடுத்து வெளிவரும் தன் படத்தின் முழுச்சம்பளத்தையும் அவர்களுக்கு தருவதாக முடிவெடுத்துள்ளாராம்.

அதற்கான உரிமங்கள் மற்றும் மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமான தகவலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.