g.v.prakash heroine admited the hospital

நடிகைகள் என்றால் எப்போதுமே சொகுசாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு நினைப்பு அனைவருக்குமே உண்டு, ஆனால் படப்பிடிப்பின் போது அவர்கள் எப்படிப்பட்ட நிலையை சந்திக்கிறார்கள் என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

தற்போது வாட்டி, வதக்கி வரும் வெயிலால் பொதுமக்கள் பலர் அவதி பட்டு வருகின்றனர், தங்களுடைய உஷ்ணத்தை தனித்து கொள்ள பழ சாறு, பழங்கள், மோர், இளநீர் என தண்ணீர் சத்து நிறைந்த பொருட்களை நாடுகின்றனர்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷுடன் புருஸ்லீ படத்தில் நடித்த நாயகி,கிருதி கர்பண்டா தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது, இவருடைய கதாபாத்திரம் முழுக்க முழுக்க வெட்ட வெளியில் தான் எடுக்கும் படி உள்ளதாம்.

இதனால் காலை முதல் தொடர்ந்து அவர் வெயிலில் நின்றாதால் தொடர் தலைவலி மற்றும் மயக்கம் போட்டு விழுந்துள்ளார், பத்து நிமிடம் ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் அவர் நடிக்க வந்தபோதும் மயக்கம் போட்டு விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் போனதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.