g.v.prakah un forgettable day
பாலா இயக்கத்தில், ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. ரஜினியின் ‘லிங்கா’ உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
பாலா, தன்னுடைய ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
‘உன்னை விட்டா யாருமில்ல’ என்று தொடங்கும் பாடலை, ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்காவுடன் சேர்ந்து பாடியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். மேலும், அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற வரியையும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த நாள் தனக்கு முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
