gvp give voice to arr in mersal
நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நீண்ட காலத்திற்கு பிறகு குரல் கொடுக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. சமீபத்தில் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேர்பைப் பெற்றுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இசைப்புயலின் பாடலுக்கு நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு குரல் கொடுக்கிறார் ஜி.வி.பி.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் விரும்பும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் அண்ணாவின் மெர்சல் படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கும் இப்படத்தின் இசையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடவுள்ளனர்.
