இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் வாட்ச்மேன். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் வெள்ளி கிழமையன்று வெளியாக உள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் வாட்ச்மேன். காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் வெள்ளி கிழமையன்று வெளியாக உள்ளது.
இந்த படத்தில் வீட்டின் பாதுகாவலனாக வளர்க்கப்படும் செல்லப்பிராணியான ஒரு நாயும் நடித்துள்ளது.

மேலும் சம்யுத்தா ஹெட்டேஜ், யோகி பாபு, சாமிநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ப்ரொமோஷனை மிகவும் வித்தாயசமாக செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதாவது அவருடைய செல்ல பிராணியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் உங்கள் வீட்டு வாட்ச்மேனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்லது விடியோவை வெளியிடமாறு கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பலர் தங்களுடைய செல்ல பிராணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோ இதோ: