பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் நடிக்க மும்முரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாது பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. முதன் முறையாக விஜய்யுடன் விஜய் சேதுபதி ஒன்றிணைந்துள்ள மாஸ்டர் படத்தை காண இருவரது ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது லாக்டவுனால் திரைத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தாலும் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். மொத்த கதையும் ஐஸ்வர்யா ராஜேஷை மையாக கொண்டு தான் நகர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில், தான் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ அறிமுகமாகியுள்ளார். டீசரில் ஒரு சில சீன்களில் இவரும் இடம்பெற்றுள்ளார். எனவே, மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பவானி ஸ்ரீ நடிக்கிறார் என கூறப்படுகிறது. இவருக்கு இவருடைய சகோதரர், ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பவானி ஸ்ரீ, High Priestess என்கிற வலைதள தொடரில் முக்கிய தாபத்திரத்தில் நடித்துள்ளார் என்றாலும், திரைப்படத்தில் இதுவே முதல் அறிமுக படம் என்பது குறிப்பிடத்தக்கது.