கோலிவுட் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின் நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், இசையமைப்பாளர், மற்றும் நடிகர் என்கிற இரண்டு குதிரையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: உடலை விட்டு நழுவும் குட்டை உடையில்... படுக்கையறை போட்டோ ஷூட்..! யாஷிகாவை மிஞ்சிய உச்ச கவர்ச்சியில் சாக்ஷி!
 

இரண்டு துறையிலும் படு பிசியாக இருந்து வரும், ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் அரை டஜனுக்கு அதிகமான படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இவருக்கு கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்து விட்டாலும், இவருடைய நீண்ட நாள் கனவு என்பது, சர்வ தேச அளவில் ஒரு ஆல்பத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என்பது தான். 

மேலும் செய்திகள்: 'பிகில்' படத்தில் விஜய் குண்டமானு கிண்டல் செய்த பாண்டியமாவா இது? சின்ன வயசுல செம்ம ஸ்லிம்! ரேர் போட்டோஸ்!
 

இவருடைய இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது.  ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தற்போது தயாராகி கொண்டு வருகிறது. இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது... ’என்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகப் போகிறது. ’கோல்ட் நைட்ஸ்’ என்ற டைட்டில் கொண்ட இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா... உள்ளிட்ட டாப் 7 நடிகைகள் மேக்அப் இல்லாமல் இருக்கும் புகைப்பட தொகுப்பு!
 

இந்த ஆல்பத்திற்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா இந்த பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் எதிர்ப்பு மிக்க, இந்த ஆல்பத்திற்கு இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.