பேய் பயத்தை காட்டப்போகும் இரண்டு GV-க்கள்... மீண்டும் ஹாரர் ரூட்டில் ஜிவி பிரகாஷ் - வைரலாகும் பர்ஸ்ட் லுக்
13 The Movie : ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செல்ஃபி, ஐங்கரன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ், தற்போது முழு நேர நடிகராக உருவெடுத்துள்ளார். மாதம் ஒரு படத்தை வெளியிடும் அளவிற்கு டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதுதவிர தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செல்ஃபி, ஐங்கரன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கே விவேக் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கும் ‘13’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஜிவி பிரகாஷ்.
இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே செல்ஃபி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். பேய் படமாக இது தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஆத்யா பிரசாத் நடித்துள்ளார். மெட்ராஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மூவேந்தர் கவனிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் விருது வென்று கெத்து காட்டிய இந்தியருக்கு குவியும் வாழ்த்துக்கள்