ஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’வுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!
 
பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இந்த படத்தில் ஹீரோவாக ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா என இரண்டு ஹீரோயின்ஸாம்.


 
மேலும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளாராம். ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘S ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.