பிரபல நடிகை சரண்யா சசி, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது தோழி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகை சரண்யா சசி, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது தோழி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகை சரண்யா சசி 'பச்சை' என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவ், பம்பாய் மார்ச் 12, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். 

இவருக்கு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூளைக் கட்டி ஏற்பட்டதாக, மொத்தம் 11 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இவரது சிகிச்சைக்காக, பல மலையாள பிரபலங்கள் உதவி செய்யவே நீண்ட கால சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே சோதனை செய்து பார்த்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து கடந்த மே 23 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை சரண்யா சசியின் தோழியும், நண்பரும், மலையாள நடிகையுமான சீமா ஜி. நாயர், சரண்யாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவருக்கு ஒரு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவருக்காக பிராத்தனை செய்யவேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.