மாஸாக எண்ட்ரி கொடுத்த ஜிபி முத்து... ஸ்டிரிக்ட் ஆன கண்டிஷன் போட்டு வீட்டுக்குள் அனுப்பிய கமல்

டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன ஜிபி முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

GP Muthu is the first contestant enter biggboss tamil season 6

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அதே கெட் அப்பில் பிக்பாஸ் அரங்கிற்குள் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் அங்குள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றிக்காட்டினார்.

பின்னர் மேடைக்கு வந்த உடன் முதல் போட்டியாளரை அறிமுகப்படுத்தினார். அதன்படி டிக்டாக் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன ஜிபி முத்துவை முதலாவதாக அறிமுகப்படுத்தினார். அப்போது ஜிபி முத்து குறித்த வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அப்போது அதில் பேசிய ஜிபி முத்து தான் ஆரம்பத்தில் விளையாட்டாக டிக்டாக்கில் வீடியோ போட ஆரம்பித்ததாகவும், பின்னர் நாளடைவில் அதன் மீது தான் அடிமையாகி ஒரு நாளைக்கு 75 வீடியோ போடும் அளவுக்கு தீவிரமாக அதிலேயே மூழ்கிவிட்டதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்...  பிக்பாஸ் வீட்டில் பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே செல்லும் 2 பேர் யார்..? வெளியானது போட்டியாளர்கள் லிஸ்ட்!

GP Muthu is the first contestant enter biggboss tamil season 6

ஒரு கட்டத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்டதும், லாக்டவுன் போடப்பட்டதால் வருமானமின்றி தவித்து விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக கூறி கண்கலங்கினார். பின்னர் யூடியூப்பில் வீடியோ போடுமாறு உறவினர்களும் நண்பர்களும் ஊக்கம் அளித்ததை அடுத்து அதில் தனக்கு வரும் கடிதங்களை படித்து காட்டி வீடியோ போட்டார். அவர் பேச்சும், வட்டார மொழியில் சரளமாக அவர் திட்டுவதும் மக்களை வெகுவாக கவர்ந்ததால் அவரது வீடியோவுக்கு அதிக வரவேற்பும் கிடைத்ததாக ஜிபி முத்து தெரிவித்தார்.

பிக்பாஸ் அரங்கிற்குள் எண்ட்ரி கொடுத்தபோது கூட பையில் கடிதங்களுடன் அவர் மாஸாக எண்ட்ரி கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். பின்னர் கமலிடம் சென்று அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஜிபி முத்துவிடம், கமல்ஹாசன் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார். அது என்னவென்றால், நீங்கள் யூடியூப்பில் திட்டி பேசும்படி இங்கு வீட்டுக்குள் இருக்க முடியாது என்றார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜிபி முத்து முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். ஏற்கனவே யூடியூப் மூலம் பேமஸ் ஆன ஜிபி முத்து பிக்பாஸ் மூலம் எந்த அளவு மக்கள் மத்தியில் பெயரெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அண்ணனை பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டு... பிரபல தமிழ் நடிகை போட்ட உருக்கமான பதிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios