நடிகை கௌதமி சமீபத்தில் கமலை விட்டு விலகியது தமிழ் திரையுலகினர் பலரை அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கௌதமியிடம் நீங்கள் ஏன் கமலை விட்டு பிரிந்தீர்கள் என கேள்வி கேட்டதில் கோபமடைந்து மைக்கை கழட்டி தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் கௌதமி .

இது குறித்து இப்போது வந்துள்ள தகவல் படி, தன்னுடைய பாப்புலாரிட்டிக்காக கௌதமி செய்த செயல் என தெரியவந்துள்ளது.

இதன் மூலம் கௌதமி பிடிக்காத இடத்தை விட்டு தைரியமாக கேள்வி எழுப்பி வெளியேறியதற்கு பாராட்டிய பலரும் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கமலை  பிரிந்ததற்கு கூட ஏதாவது இப்படி ஒரு காரணம் இருக்கும் என பலர் சமூக வலயத்தளத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர் . அதே போல பலர் ஏன் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர் .