gowthami appriciate the x videos movie
இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் 'x வீடியோஸ்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.
"இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது 'x வீடியோஸ்' என்கிற இணையதளம்.. இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க 'x வீடியோஸ்' என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம்.. ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, 'x' என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம். இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள 7 பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை கௌதமி இந்தப்படத்தை பாராட்டியதோடு, இதுபோன்ற படம் வெளிவரவேண்டும் என வாழ்த்து சொல்லி இந்தப்படத்தை அனுமதித்தார்கள். இன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப்படத்தின் 2ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும் என ஊக்கமும் கொடுத்தார். இந்தப்படத்தை இந்த அளவிற்கு மக்கள் பார்த்தல் போதுமானது என கூறி, ஒரு சில காட்சிகளை மட்டும் சென்சாரில் விதிகளுக்கு உட்பட்டு நீக்கினார்கள். மற்றபடி இன்றைய சூழலில் அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டியுள்ளார்.
