Asianet News TamilAsianet News Tamil

கமலுக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த நடிகை கௌதமி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலகநாயகன் கமல் ஹாசன், ஒரு பக்கம் பிக்பாஸ் ஷூட்டிங், மறு பக்கம் திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும். தான், புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

gowthami against campaign for kamalhassan
Author
Chennai, First Published Sep 26, 2018, 6:14 PM IST

உலகநாயகன் கமல் ஹாசன், ஒரு பக்கம் பிக்பாஸ் ஷூட்டிங், மறு பக்கம் திரைப்படம் என மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும். தான், புதிதாக ஆரம்பித்திருக்கும் கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். 

gowthami against campaign for kamalhassan

அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவுள்ளது என்பதையும் சூசகமாக அவ்வப்போது தெரிவித்து வரும் கமல், கட்சியின் உள்ளமைப்பை மிகவும் வலுவாக கட்டமைத்து வருவதாகவும் கூறப்படுகிது.

gowthami against campaign for kamalhassan

இந்நிலையில், 10 வருடங்களுக்கு மேல், கமல் ஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து, பின் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வரும் நடிகை கௌதமி, கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

gowthami against campaign for kamalhassan

இதனால் கமல் ரசிகர்கள் பலர் கௌதமியிடம் 'நீங்கள் கமலுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளீர்களா? என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்'. ஆனால் இதுவரை இந்த கேள்விக்கு கௌதமியின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios